• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கல்லூரிகளில் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்க முயற்சி - ஆளும் கட்சி பகீர் தகவல்

கேரளாவில் கல்லூரிகளில் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்க முயற்சி - ஆளும் கட்சி பகீர் தகவல்

CPM

CPM

கேரளாவில் பயங்கரவாத அமைப்புகள் என அடையாளம் காட்டப்பட்ட தாலிபான் போன்ற அமைப்பினருக்கு ஆதரவு தருகிறார்கள்.

  • Share this:
கேரளாவில் இளைஞரக்ளை குறி வைத்து பயங்கரவாதத்துக்கு இழுக்க கல்லூரிகளில் முயற்சி நடப்பதாக ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பதற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் இஸ்லாமியர் அல்லாத இளம்பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்தும், இளைஞர்களை குறிவைத்து நார்கோடிக் ஜிகாத்தும் (போதைப்பொருள்) நடத்தப்படுவதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து சர்ச்சையான நிலையில் அக்கருத்து ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

இதனிடையே கேரளாவின் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அடுத்த புயலுக்கு வித்திட்டிருக்கிறது. அக்கட்சியின் எதிர்வரும் கூட்டங்களில் தலைவர்கள் பேசுவதற்காக தயாராகியிருக்கும் அறிக்கை ஒன்றில் ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற துணைத் தலைப்பில் உள்ள தகவலில், படித்த இளம் பெண்களை குறிவைத்து கல்லூரிகளில் பயங்கரவாதத்தின் பாதைக்கு அவர்களை இழுப்பதற்கான தொடர் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்கிறார்கள். கிறிஸ்துவ சமுதாயத்தின் சிறிய பகுதியும் இஸ்லாமியர்களுக்கு எதிராக திசை திரும்ப முயற்சிகள் தொடருகின்றன.

Also read: குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! – எதுக்குனு தெரியுமா?

கேரளாவில் பயங்கரவாத அமைப்புகள் என அடையாளம் காட்டப்பட்ட தாலிபான் போன்ற அமைப்பினருக்கு ஆதரவு தருகிறார்கள்.

சங்பரிவார் அமைப்பின் நடவடிக்கைகளால் சிறுபான்மை அமைப்பினருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐஎஸ் அமைப்பை நிறுவ முயற்சிக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்பும் இஸ்லாமியர்களிடையே தங்களை ஊடுருவச் செய்ய முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

பொதுமக்களுக்கு இது போன்ற விஷயங்களை எடுத்துரைப்பதற்காக மர்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read:  ராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது – திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில் சிபிஎம் கட்சியின் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விடி சதீஷன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் தெரிவித்திருப்பது மிகவும் தீவிரமான கருத்து. இந்த கருத்தை எதை ஆதாரமாக கொண்டு சொல்கின்றனர் என முதலில் விளக்கம் தர வேண்டும். ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறார்களா என கூற வேண்டும் என அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: