முகப்பு /செய்தி /இந்தியா / கே.கே. ஷைலஜா-வுக்கு கிடைக்க இருந்த மக்சேசே விருது - முட்டுக்கட்டைப் போட்ட கட்சித் தலைமை

கே.கே. ஷைலஜா-வுக்கு கிடைக்க இருந்த மக்சேசே விருது - முட்டுக்கட்டைப் போட்ட கட்சித் தலைமை

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா

கேரளாவில் நிபா மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை உரிய நேரத்தில் சிறப்பாக கையாண்டதற்காக கே.கே. ஷைலஜாவை விருதுக்கு பரிந்துரைந்ததாகவும் கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Kerala, India

கறாரான மார்க்சிய சமூகத்தில் தனிமனிதனுக்கு இடம் கிடையாது என்று சொல்வார்கள். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  கே.கே. ஷைலஜா- வுக்கு வழங்கப்பட இருந்த மக்சேசே விருது விருதை அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களை அங்கீகரிக்கும் விதமாக மக்சேசே விருது வழங்கப்படுகிறது.

ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியத்தால் (RBF)  1957ம் ஆண்டு ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) நிறுவப்பட்டது. மறைந்த பிலிப்பைன்ஸ்  அதிபர்  ரமோன் மக்சேசே நினைவாகவும், ஆசியாவில் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தவும் இப்பரிசை ஒவ்வொரு ஆண்டும் மக்சேசே விருது அமைப்பு வழங்கி வருகிறது. இது 'ஆசியாவின் நோபல் பரிசு' என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், 64வது மக்சேசே விருது பட்டியலில் கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்  கே.கே. ஷைலஜா-வின் பெயரைச் சேர்க்க விருது அமைப்பு முடிவெடுத்தாக கூறப்படுகிறது. கேரளாவில் நிபா மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை உரிய நேரத்தில் சிறப்பாக கையாண்டதற்காக கே.கே. ஷைலஜாவை விருதுக்கு பரிந்துரைந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக  இருப்பதால், இத்தகவலை கட்சி தலைமையிடம் கலந்து பேசியிருக்கிறார். ஆனால், கட்சித் தலைமை இந்த விருதை முற்றிலும் நிராகரித்தாக கூறப்படுகிறது.

இதனை சாதாரணமாக விருது நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், நிகழ்வுகளுக்கு இடையேயான உட்தொடர்புகளை கட்சித் தலைமை அதிகம் யோசித்து நிராகரித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக, கோவிட் தொற்றுக்கு  எதிரான போராட்டத்தை சமூகமுழுமைக்காக மட்டுமே  கருத வேண்டும் என்றும், தனிமனித வாதத்திற்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்ற கோணத்தில்  கட்சித் தலைமை  யோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும், மக்சேசே தீவிர கம்யூனிச எதிர்ப்புக்காரர் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவறுத்துத் தீருவேன்  என்று கங்கனம் கட்டிக் கொண்டு சர்வாதிகார கட்சி நடத்தியதையும் கட்சித் தலைமை நினைவுக் கூர்ந்து விருதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க:  ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்த முடிவை வரவேற்கும் சிலர் , மார்க்கசிய இயங்கியலில் அடிப்படையான கருத்தாக்கம் முரண்பாடு தான். முரண்பாடுகள் மாற்றத்தின் ஊற்றுக்கால் என்று அது ஏற்றுக் கொள்கிறது. வரலாற்றின் அடிப்படையான உண்மை முரண்பாடுகளே என்று சொல்கிறது. அந்த வகையில், மக்சேசே விருதை புறக்கணித்தன் மூலம், தனிமனித வாதம்/ சமூக முழுமை என்ற இயங்கியல் முரண்பாடுகளுக்கு இடையேயான விவாதத்தை மீண்டும் அக்கட்சி எழுப்பி வருவதாக மார்க்கசீய அரசியல் சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

top videos

    மறுப்புறம், கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்  முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கருத்து முதல் வாதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இது, கேரளாவுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்திருக்கும். மக்சேசே விருது வாங்கும் முதல் கேரள பெண்மணியாக  ஷைலஜா இருந்திருப்பார் என்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: CPI, Kerala