• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘இதற்காக தான் காங்கிரஸில் இணைந்தேன்': கண்ணையா குமார் அளித்த விளக்கம்

‘இதற்காக தான் காங்கிரஸில் இணைந்தேன்': கண்ணையா குமார் அளித்த விளக்கம்

கண்ணையா குமார்- ஜிக்னேஷ் மேவானி

கண்ணையா குமார்- ஜிக்னேஷ் மேவானி

காங்கிரஸ் காக்கப்பட்டால் நாட்டின் இளைஞர்களின் கனவுகள்,  மகாத்மா காந்தியின் ஒற்றுமை,  பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவ எண்ணம் ஆகியவையும் காக்கப்படும் என்று கண்ணையா குமார் கூறினார்.

  • Share this:
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவருமாக இருந்த  கண்ணையா குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருடன்  குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானியும்  உடன் இருந்தார்.

    ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவராக இருந்த கண்ணையா குமார், கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதி அஃசல் குருவின் நினைவு நாளன்று தேச விரோத கோஷங்களை எழுப்பியதால் சிறை தண்டனை பெற்றவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

    இதேபோல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளராக திகழும் ஜிக்னேஷ் மேவானி  வத்கம் எனும் தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இந்தியாவின் இளம் அரசியல் தலைவர்களுக்கு முக்கியமானவர்களாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.

    காங்கிரஸில் இணைந்தது ஏன்

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா குமார்,  “காங்கிரஸ் என்பது கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம். நாட்டின் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் ஜனநாயகத் தன்மை உடைய கட்சி காங்கிரஸ். நான் மட்டுமல்ல, நாட்டில் பலரும் காங்கிரஸ் இல்லாமல் இந்தியா பிழைக்க முடியாது என்று நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: லடாக் எல்லையில் சீன வீரர்கள் தங்குமிடம்:எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா!


    காங்கிரஸ் என்பது மிகப்பெரிய கப்பலை போன்றது. அது காக்கப்பட்டால் நாட்டின் இளைஞர்களின் கனவுகள்,  மகாத்மா காந்தியின் ஒற்றுமை,  பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவ எண்ணம் ஆகியவையும் காக்கப்படும்.  இதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்” என்று தெரிவித்தார்.


    மேலும் படிக்க: நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா


    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜிக்னேஷ் மேவானி, “சில காரணங்களால் என்னால் காங்கிரஸ் கட்சியில் முறையாக இணைய முடியவில்லை.  நான் தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ. காங்கிரஸில் சேர்ந்தார் எனது பதவி போய்விடும். வரவுள்ள தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: