'மாட்டுத் தொழுவத்தில் தேர்வுக்கு தயாரானேன்’ - கடின உழைப்பால் நீதிபதியான பால் வியாபாரி மகள்..

'மாட்டுத் தொழுவத்தில் தேர்வுக்கு தயாரானேன்’ - கடின உழைப்பால் நீதிபதியான பால் வியாபாரி மகள்..

கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி ஒருவரை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்ற வார்த்தைக்குக்கு வலுசேர்த்திருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த பால்வியாபாரியின் மகளான சோனல். 

கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி ஒருவரை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்ற வார்த்தைக்குக்கு வலுசேர்த்திருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த பால்வியாபாரியின் மகளான சோனல். 

  • News18
  • Last Updated :
  • Share this:
ராஜஸ்தானைச் சேர்ந்த பால்வியாபாரியின் மகள் ஒருவர், தனது அயராத கடின உழைப்பால் அம்மாநிலத்தில் மாஜிஸ்திரேட் நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்.

கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி ஒருவரை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்ற வார்த்தைக்குக்கு வலுசேர்த்திருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த பால்வியாபாரியின் மகளான சோனல்.  அவர், தனது அயராத கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் ராஜஸ்தான் மாநிலத்தின் Judicial Service (RJS) தேர்வில் வெற்றிபெற்று அம்மாநிலத்தின் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

உதய்பூர் பகுதியில் சோனலின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பால் வியாபாரியான சோனலின் தந்தை அதிகாலை 4 மணிக்கு எழுந்து பால் கறந்து விற்பனை சென்றுவிடுவார். அவருக்கு உதவியாக நாள்தோறும் மாட்டுக்கொட்டகையில் இருக்கும் சாணத்தை அகற்றி, மாடுகளுக்கு தீனி போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்த சோனம், தொடர்ந்து தன்னுடைய படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். 

இளங்கலை சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ள சோனம் தொடர்ந்து நீதிபதி தேர்வுக்கு பயிற்சி எடுத்தார். 2018ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான்  ஜூடிசியல் தேர்வில் (Rajasthan Judicial Service) தேர்வில் வெற்றி பெற்ற அவர், பொதுப்பிரிவில் ஒரு மார்க் குறைவான கட்ஆப் (Cutoff) எடுத்ததால், நீதிபதியாக தேர்வாக முடியவில்லை. பின்னர் தேர்தெடுக்கப்பட்ட 7 பேர் அந்தப் பணியில் சேராததால், அந்த இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. 

அப்போது, சோனலின் குருவான சத்யேந்திர சிங்கின் வழிகாட்டுதலின்படி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு(Writ pettion) தாக்கல் செய்த சோனல், காலியாக உள்ள 7 பணியிடங்களில் ஒரு இடத்தை காத்திருப்பு பட்டியலில் இருக்கும் தனக்கு ஒதுக்குமாறு முறையிட்டுள்ளார். சில மாதங்களாக அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலியாக இருக்கும் ஒரு இடத்தை சோனலுக்கு ஒதுக்குமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது. 

இதன்மூலம் முதல்நிலை மாஜிஸ்திரேட்டாக சோனல் பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசிய சோனலின் குருவான சத்யேந்திர சிங், நீதிபதியாகி இருக்கும் சோனலின் பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை எனக் கூறினார். கடினமாக உழைத்து, விடாமுயற்சியுடன் சோனல் பயிற்சி மேற்கொண்டு நீதிபதி தேர்விலும் வெற்றி பெற்றாலும், குறைவான கட் ஆப் காரணமாக பதவியை பெற முடியாமல் போனதாக தெரிவித்தார். பின்னர் சட்டப்போராட்டம் நடத்தி, அதன் மூலம் தற்போது அவர் நீதிபதியாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சத்யேந்ததிர சிங் கூறினார்.

Also read... LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.. ஓய்வூதிய சேவை பற்றி இங்கே படியுங்கள்..

இதுகுறித்து மாஜிஸ்திரேட்டாக பணியாற்றவுள்ள 26 வயதாகும் சோனல் பேசும்போது, " இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நீதிபதியாகி இருக்கிறேன். கடினமாக உழைத்துதான் இந்த இடத்துக்கு நான் வந்துள்ளேன். தேர்வில் வெற்றி பெற்றபோதும் கட்ஆப் குறைவு காரணமாக பதவி கிடைகாதபோது மிகவும் வருந்தினேன். ஆனால், சட்டப்போராட்டம் நடத்தி தற்போது நீதிபதியாகியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளி செல்லும்போது என் தந்தை பால் வியாபாரி என சொல்வதற்கு வெட்கப்படுவேன். ஆனால் என் பெற்றோரை நினைத்து தற்போது பெருமைப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். 

மேலும், " படிப்பதற்கு தேவையான கட்டணம் கட்டக்கூட லோன் வாங்க வேண்டியிருந்ததால், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான பணம் இல்லை, பயிற்சி வகுப்புகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதனால், மாட்டுத் தொழுவத்திலேயே அவற்றை கவனித்தவாறு என்னை தேர்வுக்கு தயார்படுத்தினேன். கஷ்டங்களுக்கு இடையே நான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது"  என்று சோனல் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: