மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள சாத்வி ப்ரக்யா, போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக சாத்வி பிரக்யா தாகுர் போட்டியிடுகிறார்.
2006-ம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் பிரக்யா தாகுர். அவர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, வேட்பாளராக அறிவித்திருப்பது நாடு முழுவதும்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
படிக்க... சாத்வி பிரக்யா போட்டியிட தடை கோரி வழக்கு! பா.ஜ.கவுக்கு நெருக்கடி
மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நிலை காரணங்களை கூறி அவர் ஜாமின் பெற்ற நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடுவது கேள்விகளை எழுப்பியிருந்தது. எனினும், சாத்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை பிரதமர் மோடியும் நியாயப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சாத்வி பிரக்யா இந்தியா டுடே டிவிக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில், மாட்டு கோமியம் மற்றும் பஞ்சகவ்யா ஆகியவை தனது புற்றுநோயை குணப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“கோமாதாவை பின்புறம் இருந்து கழுத்தை நோக்கி தடவிக்கொடுத்தால் கோமாதா அமைதியாக உணரும். இதனை தினமும் செய்தால் உங்கள் உடலில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்” என்று சாத்வி கூறியுள்ளார்.
சாத்வி பிரக்யா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhopal S12p19, Lok Sabha Election 2019, Madhya Pradesh Lok Sabha Elections 2019