கதிர்வீச்சைக் குறைக்க மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் - மத்திய அரசு அறிமுகம்

கதிர்வீச்சைக் குறைக்க மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கதிர்வீச்சைக் குறைக்க மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் - மத்திய அரசு அறிமுகம்
கதிர்வீச்சைக் குறைக்க மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • Share this:
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (RKA) தலைவர் வல்லபாய் கதிரியா, மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். கதிர்வீச்சைக் குறைக்க இதை மொபைல் போன்களில் பயன்படுத்தலாம் என்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். மாட்டுச் சாணம் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'காமதேனு தீபாவளி அபியான்' திட்டம் குறித்த நாடு தழுவிய பிரச்சாரத்தின்போது இந்த சிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்போது இதுகுறித்து பேசிய வல்லபாய் கதிரியா, “மாட்டுச் சாணம் அனைவரையும் பாதுகாக்கும். இது கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கதிர்வீச்சு எதிர்ப்பு சிப் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.

Also read: சசிகலாவிற்கு எப்போதும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்போம் - கருணாஸ்’கசத்வா கவாச்’ என பெயரிடப்பட்ட இந்த சிப்பை ராஜ்கோட்டையை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீஜி கசத்வா என்பவர் தயாரித்துள்ளார். ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பானது 2019ம் ஆண்டு கால்நடைகள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டது. இந்த ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் மீன் வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகங்களின் கீழ் வருகிறது.

மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பண்டிகை காலம் என்பதால் மாட்டுச் சாணம் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.அதில் மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மண் விளக்குகள், மெழுகுவர்த்திகள், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இந்த தீபாவளிக்கு சீனத் தயாரிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிரதமர் மோடியின் சுதேசி இயக்கம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையில் மாட்டுச் சாண தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு வல்லபாய் கதிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading