ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு... இன்றைய நிலவரம்!

இந்தியாவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு... இன்றைய நிலவரம்!

கொரோனா

கொரோனா

COVID19 : இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நம் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது.

  இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 4,912 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது.

  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39, 95 ,610 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,196 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 43,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இன்றைய நிலவரம்

  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ,28 ,510 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.58 % ஆக உயர்ந்துள்ளது.

  நாடு முழுவதும் இதுவரை 217,56,67,942 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: CoronaVirus