'மரணத்தை தொட்டுவிட்டு வந்திருக்கேன்' - கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 75 வயது மும்பை பெண்

மும்பை பெண்

மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர் 24 மணிநேரம் இருப்பதே சிரமம் என்றுதான் சொன்னார்கள். அதை கேட்டதும் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

 • Share this:
  மும்பையைச் சேர்ந்த சைலஜா கொரோனா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேரத்தை கடப்பதே சவாலானது எனக் கூறிய நிலையில் 13 நாள் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சைலஜா ஒரு நீரிழிவு நோயாளி. அவர் கொரோனாவில் இருந்து மீண்டதையடுத்து மருத்துவர்களும், செவிலியர்களும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

  மும்பையை சேர்ந்த சைலஜா காய்ச்சல் காரணமாக இரண்டு - மூன்று நாள்கள் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆக்சிஜன் அளவு குறைந்ததையடுத்து ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. அவரால் இயல்பாக மூச்சுவிட முடியவில்லை. சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  சைலஜாவின் மகன் பிரசாந்த் பேசுகையில், “நான் மரணத்தை தொட்டுவிட்டு வந்திருக்கேன் என அம்மா சொன்னார். அது உண்மைதான். மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர் 24 மணிநேரம் இருப்பதே சிரமம் என்றுதான் சொன்னார்கள். அதை கேட்டதும் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. நான் செயலற்றவன் ஆகிவிட்டேன். என் உள்மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது. என் அம்மாவுக்கு போராட்ட குணம் அதிகம். அவர் மீண்டு வந்துவிடுவார் என நம்பினேன். நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை எங்களால் முடிந்தவரை போராடினோம்.

  ரெம்டெசிவர் மருந்துக்காக நாங்கள் அழைந்ததை மறக்க மாட்டோம். 8 டோஸ் மருந்துக்காக நாங்கள் அழைந்ததை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம். இப்போது அவர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுவிட்டார். இப்போது அவருக்கு ஆக்சிஜன் தேவை இருக்கிறது. வீட்டில் இப்போது ஒருநாளைக்கு 2 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அவர் பூரண குணமடைய 6 மாதங்களாகும்” என்றார்.

  சைலஜாவுக்கு  நீரிழிவு பிரச்னை இருந்தது. மேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது கட்டாயம் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில்தான் இருந்தார். கொரோனாவில் இருந்து அவரை மீட்பதற்காக நாங்கள் அனைவரும் மிகத்தீவிரமாக போராடினோம். கொரோனாவுக்கு எதிரான வெற்றி இது.” என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: