Home /News /national /

12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி

குழந்தைகளுக்கு தடுப்பூசி

Corona Vaccine Drive | 12-14 வயதுடையோருக்கு கார்பிவேக்ஸ் (Corvbevax) தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

    இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போட விரும்புவோம் கோவின் இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    12-14 வயதுடையோருக்கு கார்பிவேக்ஸ் (Corvbevax)தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது 2 டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூடுதலாக 2 டோஸ்கள் வரை செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், 12-14 வயதுடையோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - மார்ச் 16 முதல் 12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

    18 மற்றும் அதற்கு அதிகமான வயதுடையோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், 12-14 வயதுடையோருக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

    இந்த வயதுடையோர் தாங்களாகவோ அல்லது பெற்றோர் துணையுடனோ கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

    இதையும் படிங்க - ''போலி ஆவணங்கள் மூலம் கொரோனா நிவாரண நிதி'' - உச்ச நீதிமன்றம் கவலை

    4 பேர் கொண்ட குடும்பத்தல் ஒருவரது மொபைல் எண்ணை பயன்படுத்தி 4 பேருக்கு தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    2 மாதங்களுக்கு முன்பாக 15-18 வயதுடையோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19 vaccine

    அடுத்த செய்தி