Home /News /national /

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் 15-18 வயதினர்... மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் 15-18 வயதினர்... மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டு

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 15-18 வயதுடையோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் ஆச்சர்யம் அளிப்பவையாக உள்ளன.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அரசு இதனை இலவசமாக வழங்கி வந்தாலும், அதனை செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் சுணக்கம் இருந்து வருகிறது.

    தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாம் அலை வீசி வருகிறது. இதற்கு புதிதாக மாற்றம் அடைந்த கொரோனா வேரியன்ட்டான ஒமைக்ரான் வைரஸே முக்கிய காரணமாகும். இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்த டோஸ் முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    Also read... 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்! 

    இதற்கிடையே, இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த 3ம் தேதியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பின்னர் மட்டும் 15-18 வயதுடய 2 கோடிப்பேர் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர். இது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பதாக கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி செலுத்திக்கொள்ள குழந்தைகள் காட்டும் ஆர்வத்தை பாராட்டியுள்ளார்.

    இதற்கிடையே, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 91 லட்சத்துக்கும் நெருக்கமாக (90,59,360) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்றைய நிலவரப்படி 150.61 கோடியைக் (150,61,92,903) கடந்தது. 1,60,89,073 அமர்வுகள் மூலம் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    Also read... கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 154.77 கோடிக்கும் மேற்பட்ட (1,54,77,87,725) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.88 கோடிக்கும் மேற்பட்ட (17,88,98,351) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

    மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு
    Published by:Musthak
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி