Home /News /national /

15-18 வயது சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு - தேவையான ஆவணம் என்ன?

15-18 வயது சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு - தேவையான ஆவணம் என்ன?

Cowin Registration

Cowin Registration

நாட்டில் 15 முதல் 18 வயது பிரிவு சிறுவர்களை கணக்கில் கொண்டால் 7 முதல் 8 கோடி என்ற எண்ணிக்கை இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் COWIN போர்டல் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், 15 முதல் 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ம் தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் எனவும் பிரதமர் அறிவித்தார்.

    இதனையடுத்து CoWIN போர்டலின் தலைவர், மருத்துவர் ஆர்.எஸ்.சர்மா இன்று செய்தியாளர்களிடையே பேசுகையில், 15 - 18 வயது சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள CoWIN போர்டலில் வரும் ஜனவரி 1ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் பெரும்பாலான மாணவர்களிடம் ஆதார் போன்ற ஆவணங்கள் இருக்காது என்பதால் 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என கூறினார்.

    Also read:  120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

    பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே குழந்தைகளுக்கு செலுத்தப்படும். நாட்டில் 15 முதல் 18 வயது பிரிவு சிறுவர்களை கணக்கில் கொண்டால் 7 முதல் 8 கோடி என்ற எண்ணிக்கை இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் டோஸுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையே ஆன கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் என நிர்ணயிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

    Also read:  சிறுவர்களுக்கு தடுப்பூசி.. முதியவர்களுக்கு பூஸ்டர்- பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

    Zydus Cadila நிறுவனத்தின் ZyCoV-D தடுப்பூசி இன்னும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ZyCoV-D தடுப்பூசி உலகின் முதல் டிஎன்ஏ சார்பான ஊசி இல்லாத தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Cowin, Vaccine

    அடுத்த செய்தி