• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Covid third wave | பெங்களூருவில் அபார்ட்மெண்ட்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

Covid third wave | பெங்களூருவில் அபார்ட்மெண்ட்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சில அடுக்குமாடி குடியிருப்புகளில் மீண்டும் கொரோனா பரவுவதால், தொற்று அதிகமானோர் வசிக்கும் பிளாட்டுகளை, 'மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' மண்டலமாக அடையாளம் காண, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

  • Share this:
    பெங்களூரில் ஊரடங்கு கெடுபிடிகள், தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புகளில், தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து, பெங்களூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக, அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா விதிமுறைகளை மீறுகின்றனர்.இதன் விளைவாக, கொரோனா தொற்று பரவுகிறது. இது மாநகராட்சிக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    Also Read: 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா, 12 நாடுகளில் டெல்டா பிளஸ் பரவல்- WHO

    இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    சில அடுக்குமாடி குடியிருப்புகளில், மீண்டும் கொரோனா பரவுவதால், தொற்று அதிகமானோர் வசிக்கும் பிளாட்டுகள், 'மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' மண்டலமாக அடையாளம் காணப்படும்.கொரோனா நோயாளிகளை பரிசோதித்து, வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்.வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோர் கண்காணிக்கப்படுகின்றனர். மக்கள் கூட்டம் சேராமல், பார்த்துக்கொள்ளும்படி, அடுக்குமாடி குடியிருப்பு அசோசியேஷனுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also Read: 1978ம் ஆண்டு முதல் அரசுக்கு வாடகை பாக்கி.. RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

    இது தொடர்பாக பெங்களூரு அடுக்கு மாடிக் குடியிருப்பு கூட்டமைப்பின் தலைவர் விக்ரம் ராய் ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளுக்குள் இருக்கும் நீச்சல் குளம், உடல்பயிற்சி நிலையம், விளையாட்டுத் திடல் போன்றவற்றை திறப்பதில் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும் என்றார்.

    பெங்களூருவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவில்லை என்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் 60 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: