ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்த நாடுகளில் இருந்து வருபவரா? உங்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

இந்த நாடுகளில் இருந்து வருபவரா? உங்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Covid Test : பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டாலோ அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அத்துடன் சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎஃப்.7 கொரோனா வைரஸ் அண்டை நாடான இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், பண்டிகை கால கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க;  திருப்பதிக்கு போறீங்களா.. இனி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

இந்த நிலையில் மன்சுக் மாண்டவியா இன்று அளித்த பேட்டியில், “சீனா, ஜப்பான், தெற்கு கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. அப்படி பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டாலோ அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Airport, Corona, COVID-19 Test