ஹோம் /நியூஸ் /இந்தியா /

Covid-19: உ.பி.யில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த பெண்!

Covid-19: உ.பி.யில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த பெண்!

நொய்டாவில் காரிலேயே உயிரிழந்த பெண்

நொய்டாவில் காரிலேயே உயிரிழந்த பெண்

குப்தாவை அழைத்து வந்த குடியிருப்பு உரிமையாளர் மருத்துவமனை அதிகாரிகளிடம் அந்த பெண் உயிருக்கு போராடுவதாகவும், படுக்கை ஒதுக்கும்படி கெஞ்சியுள்ளார். எனினும் யாரும் இதனை பொருட்படுத்தவில்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதித்த பெண் காரிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கி வரும் இரண்டாம் அலை பரவலால், பல்வேறு இடங்களில் மருத்துமனைகளில் இடம் கிடைப்பதும், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைப்பதும் கடும் சிரமமாகி உள்ளது. இதனால், கொரோனா பாதித்த பலரும் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

  இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஜக்ரிதி குப்தா என்ற பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொறியாளரான குப்தா நொய்டாவில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். குப்தாவின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில், குப்தா தனது பணியின் காரணமாக நொய்டாவில் தனியாக இருந்து வந்துள்ளார்.

  இதனிடையே, கொரோனா பாதித்து மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த குப்தாவை, அவரது குடியிருப்பின் உரிமையாளர் அவனிஷ் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளார். இதற்காக மூன்று தனியார் மருத்துவமனைகளை அனுகியுள்ளனர். எனினும் எங்கும் இடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குப்தாவை அவர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து சுமார் 7 மணி நேரம் அவர்கள் மருத்துவமனை வளாக பார்கிங் பகுதியில் காரிலே காத்திருந்துள்ளனர்.

  இதனிடையே, குப்தா மூச்சு விடுவதில் கடும் சிரமமடைந்துள்ளார். இதையடுத்து குப்தாவை அழைத்து வந்த குடியிருப்பு உரிமையாளர் மருத்துவமனை அதிகாரிகளிடம் அந்த பெண் உயிருக்கு போராடுவதாகவும், படுக்கை ஒதுக்கும்படி கெஞ்சியுள்ளார். எனினும் யாரும் இதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, அந்த பெண்ணின் மூச்சு நின்றுள்ளது. இதனை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணை சோதித்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதித்தவர்கள் பலர் இதுபோல சாலையிலே உயிரிழந்து வருகின்றனர். படுக்கைகள், ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாமல் அவர்களது குடும்பத்தினர் மீண்டும் அவர்களை வீட்டிற்கே அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

  ஒட்டுமொத்த நாடே இந்த கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி போராடி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை என்றும், மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிப்பதில் ஆரம்பத்தில் சிக்கல்கள் இருந்தது, தற்போது அதுவும் சரிசெய்யப்பட்டு விட்டது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, COVID-19 Second Wave, Noida, Uttar pradesh