• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த வில்லங்க மாமியார்!

கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த வில்லங்க மாமியார்!

மாதிரி படம்

மாதிரி படம்

மருமகளை பழிவாங்குவதற்காக கொடிய கொரோனா வைரஸையே அவருக்கு பரப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் கொரோனா பாதித்த மாமியார் ஒருவர்.

  • Share this:
மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் மாமியார் ஒருவர். மாமியார் - மருமகள் இடையிலான சண்டை, சச்சரவுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கிறது இந்தச் சம்பவம்.

மாமியார் - மருமகள் இடையிலான ஊடல் என்பது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பனிப்போர். சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவகாரம், சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படும்.

இந்த கொரோனா காலத்திலும் மாமியார் - மருமகள் இடையிலான சண்டை புதிய வடிவம் எடுத்து ஒரு படி மேலாகவே சென்றுவிட்டது.

தங்களுக்குள் இருக்கும் பகைக்கு நடுவே மருமகளை பழிவாங்குவதற்காக கொடிய கொரோனா வைரஸையே அவருக்கு பரப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் கொரோனா பாதித்த மாமியார் ஒருவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிர்சிலா மாவட்டம் நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த நபருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்திருக்கிறது.

இதனிடையே அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருந்துவருகிறார். மாமியாருக்கு கொரோனா என்பதால் அவரிடம் சமூக விலகலை கடைப்பிடித்து விலகியே இருந்து வந்திருக்கிறார் அதே வீட்டில் வசித்து வரும் அவருடைய மருமகள். இதனை பிடிக்காத மாமியார், தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென்றதால் வேண்டுமென்றே தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து வந்திருக்கிறார். மேலும் அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார்.

Also Read:  3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

இதன் காரணமாக மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனையே காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியிருக்கிறார்.

Also Read:  பயிற்சிக்கு வந்த 17 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த டென்னிஸ் பயிற்சியாளர்! அடுத்த அதிர்ச்சி..

வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒரிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் தன்னுடைய மனைவிக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: