ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இருவரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகிறது!

கேரளாவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இருவரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகிறது!

கடந்த 24 மணி நேரத்தில் 1,12,281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,12,281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,12,281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 3.33 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,43,495 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.07 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,49,335 ஆக உள்ளது, நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 5.69 சதவீதமாக உள்ளது.

  Also read:   காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!

  தொடர்ந்து, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்துக்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 162.26கோடியைக் கடந்தது. 1,75,24,670 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே, கொரோனா சோதனை செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

  இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,12,281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் புதிதாக 55,475 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30,226 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கொரோனாவுக்கு இன்று 70 பேர் பலியாகியுள்ளனர்.

  இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,141 ஆக உயர்ந்துள்ளது. 2,85,365 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் நேர்மறை விகிதம் 49.40 சதவீதத்தைத் தொட்டுள்ளது. கொரோனா சோதனை செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இது குறிக்கிறது.

  கேரளத்தில் தற்போது 84 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also read: இனி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது.. அதிரடியாக அறிவித்த முதல்வர் கெஜ்ரிவால்!

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, Covid-19, Kerala