கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு: நெகிழ்வூட்டும் ஆக்ரா ரெஸ்டாரண்ட்!

கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு: நெகிழ்வூட்டும் ஆக்ரா ரெஸ்டாரண்ட்!

ஆக்ராவைச் சேர்ந்த பகத் ஹல்வாய்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு சிகிச்சையில் இருந்து வரும் 120 பேருக்கு, 240 உணவு பாக்கெட்டுகளை நேரடியாக சென்று டெலிவரி செய்து வருகிறார்.

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இலவச உணவு வழங்கி சேவை செய்து வருகிறது ஆக்ராவைச் சேர்ந்த பகத் ஹல்வாய் எனும் ரெஸ்டாரண்ட் ஒன்று.

  நெருக்கடியான காலகட்டங்களில் அதனைப் பயன்படுத்தி வருமானம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதே இக்கட்டான தருணத்தில் மனித நேயத்துடன் உதவி செய்யவும் சிலர் முன்வருகின்றனர். கடந்த ஆண்டு நம்மிடையே அப்படியொரு ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பஸ், ரயில், விமானம் என சொந்த செலவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதுமட்டுமல்லாது என்னற்ற பல உதவிகளை ஓடோடிச் சென்று உதவினார் அவர்..

  திரைப்பிரபலம் என்பதால் சோனு சூட் செய்த உதவிகள் வெளி உலகுக்கு தெரிந்தன. ஆனால் அவரை போல என்னற்ற ரியல் லைஃப் ஹீரோக்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆக்ராவில் உள்ள பகத் ஹல்வாய் எனும் ரெஸ்டாரண்டை நடத்தி வரும் சிவம் பகத் என்பவர் தன்னலம் பாராமல் தனது ரெஸ்டாரண்டில் உணவு தயாரித்து அதனை உடனடியாக சுடச்சுட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு சிகிச்சையில் இருந்து வரும் 120 பேருக்கு, 240 உணவு பாக்கெட்டுகளை நேரடியாக சென்று டெலிவரி செய்து வருகிறார்.

  அவரின் இந்த இலவச சேவையானது பெருந்தொற்றால் துயரில் சிக்கியிருக்கும் ஒரு சில குடும்பங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

  இது தொடர்பாக சிவம் பகத் கூறுகையில், தினமும் மதிய மற்றும் இரவு உணவை எங்கள் ரெஸ்டாரண்டிலேயே தயாரித்து கொரோனா நோயாளிகளுக்கு டெலிவரி செய்து வருகிறோம். உணவை சமைப்பது எங்களுக்கு எளிது தான், எவ்வளவு தேவை என்றாலும் செய்துவிடுவோம், ஏனென்றால் அது தான் எங்களின் அன்றாட பணி, ஆனால் அதனை டெலிவரி செய்வது தான் எங்களுக்கு சவாலானது. தன்னார்வலர்களின் உதவியுடன் இந்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த இரண்டு நாட்கள் மட்டும் எங்களால் இச்சேவையை தொடர முடியவில்லை. எங்கள் டெலிவரி வாகனங்களுக்கு மட்டும் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம் , அது கிடைத்தவுடன் அந்த இரண்டு நாட்களிலும் எங்களால் சேவை செய்ய முடியும்.

  மேலும் மருத்துவர் பரிந்துரைப்படி சிலருக்கு குறிப்பிட்ட உணவு தேவைப்படுகிறது, அதனையும் கேட்டறிந்து அதனை மட்டும் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம்.
  Published by:Arun
  First published: