• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பண்டிகை காலம் எனபதால் கோவிட் தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக செயல்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

  • Share this:
மத்திய உள்துறை அமைச்சகமானது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாட்டில் கடைபிடிக்க கோவிட்-19 வழிகாட்டுதல்களை வரும் நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. அதே நேரம் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உடனடி மற்றும் பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக கடந்த செப்டம்பர் 28 அன்று பிறப்பிக்கப்பட்ட முந்தைய வழிகாட்டுதல்கள் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் சமீபத்திய உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.

பண்டிகை காலம் எனபதால் கோவிட் தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக செயல்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 50% சீட் கெப்பாசிட்டியுடன் சினிமாஸ், தியேட்டர்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் போன்ற பலவற்றின் நடவடிக்கைகளை அனுமதிக்கும் தற்போதைய வழிகாட்டுதல்கள் நவம்பர் 30 வரை தொடர்ந்து பொருந்தும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து முக்கிய செயல்பாடுகளும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் ( containment zones) கடும் லாக்டவுன் தொடரும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கவும், மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை தொடர்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி கோவிட்-19 வழிகாட்டுதல்களின் சமீபத்திய நீட்டிப்பு இருக்கிறது. மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டவை மற்றும் தொடர்ந்து மூடப்பட வேண்டியவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

* மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டவை தவிர, மற்ற சர்வதேச பயணங்களுக்கு தடை நீடிக்கிறது.

* பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை வகுப்பு வாரியாக திறப்பது குறித்து முடிவெடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கற்றல் உள்ளிட்டவை விருப்பமான கற்பித்தல் முறையாக தொடரும் என்றும், மேலும் இவை ஊக்குவிக்கப்படும் என்றும் சமீபத்திய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட விவசாய கூலிகள் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

* திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்ட இடங்களில் (closed space) உள்ள கல்வி மற்றும் பிற ஒத்த நிறுவனங்கள் அதிகபட்சமாக 50% ஹால் கெப்பாசிட்டியுடன் 200 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே 50% கெப்பாசிட்டியுடன் கண்காட்சிகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சினிமாஸ், தியேட்டர்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் ஆகியவற்றுக்கு அனுமதி.

பண்டிகை காலங்களில் எச்சரிக்கையுடன், பாதுகாப்பாக இருக்க வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது மிகவும் முக்கியமானது. .நாட்டில் தினசரி பாதிப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது, ஆனாலும் ஒரு சில மாநிலங்களில் உள்ளூர் அளவில் வைரஸ் பரவுவதால் கோவிட் தொடர்ந்து ஒரு பொது சுகாதார சவாலாகவே உள்ளது என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: