Home /News /national /

டெல்லியில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களில் பாதியாக குறைந்தது... மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகரிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களில் பாதியாக குறைந்தது... மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகரிப்பு

Corona

Corona

கர்நாடகாவில் நேற்று கொரோனா தொற்று ஒரே நாளில் 41,400 ஆக பதிவானா நிலையில், இன்றைக்கு எண்ணிக்கை 48,905 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22,427 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.

    டெல்லியில் கடந்த 12 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருப்பது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கு கடந்த 13-ம்தேதி கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 94,160 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 42,010 ஆக குறைந்துள்ளது

    எதிர்பார்த்தபடியே கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்குவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்னர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 'டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. இவை முன்னரே நாங்கள் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் பொதுமக்கள் வழக்கமான விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இவை தொடர்ந்தால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் பலனை பெற முடியும்.' என்றனர்.

    இதையும் படிங்க : காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!

    மகாராஷ்டிராவை பொருத்தளவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,756 ஆக உள்ளது. நேற்று 33,914 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 79 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    அதே நேரம் கடந்த 24 மணிநேரத்தில் ஒமைக்ரானால் யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் 2,858 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,534 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.

    Also read:   பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..

    கர்நாடகாவில் நேற்று கொரோனா தொற்று ஒரே நாளில் 41,400 ஆக பதிவானா நிலையில், இன்றைக்கு எண்ணிக்கை 48,905 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22,427 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.

    மாநிலம் முழுவதும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,57,909 ஆக உள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் கர்நாடகாவில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி