Home /News /national /

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு.. குறைகிறது பரவல்.. டெல்லி அரசு முடிவு!

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு.. குறைகிறது பரவல்.. டெல்லி அரசு முடிவு!

இரவு ஊரடங்கு

இரவு ஊரடங்கு

Covid curbs to ease soon | கொரோனா பாசிடிவிட்டி விகிதம் கடந்த 10 நாட்களில் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

    கொரோனா பரவல் விகிதம் கடந்த 10 நாட்களில் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

    நாட்டில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தினமும் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கும் தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று நேர்மறை விகிதம் என்பது 20.7%-ல் இருந்து 15.5% ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து, டெல்லியிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லியில் கொரோனா பாசிடிவிட்டி விகிதம் கடந்த 10 நாட்களில் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி சோதனை நேர்மறை விகிதம் ஜனவரி 15 அன்று 30 சதவீதமாக இருந்து தற்போது சுமார் 10 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. தடுப்பூசியின் சீரான வேகம் காரணமாக இது சாத்தியமானது.

    Also read:    வக்கிர புத்தி படைத்த தந்தையால் மைனர் சிறுமிக்கு சேர்ந்த அவலம்!!

    நாங்கள் விரைவில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்போம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

    மேலும், டிடிஎம்ஏ புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் டெல்லியில் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு தொடரும். டெல்லி அரசின் அனைத்து அலுவலகங்களிலும் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் வைக்கப்படும். இனி எந்த அரசியல்வாதியின் புகைப்படங்களும் வைக்கப்படாது. கடந்த ஏழு ஆண்டுகளில் கல்வித் துறையில் டெல்லியில் புரட்சியைக் கொண்டு வந்துள்ளோம்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவோம். கடந்த ஏழு ஆண்டுகளில் கல்வித்துறையில் அந்த புரட்சியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், எங்கள் அரசுப் பள்ளிகளையும் பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    Also read:  தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Delhi

    அடுத்த செய்தி