மரத்துக்கடியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - மத்தியப் பிரதேசத்தின் அவலநிலையை விளக்கும் புகைப்படம்

மரத்துக்கடியில் சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மரத்துக்கடியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட புகைபடம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இரண்டாவது அலை பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், மருத்துவமனை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் 25-ம் தேதியிலிருந்து மே 4-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் மட்டும் 1.25 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, சுமார் 89,000 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றர்.

  மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்துவருகிறது. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி இது அபாயகரமானது நிலை ஆகும். இருப்பினும், கடந்த சில தினங்களுக்கு கொரோனா பாதிப்பு 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. இருப்பினும், மத்தியப் பிரதேச மாநில சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில் மரத்துக்கு அடியில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழல் உள்ளது. அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

  அகர் மால்வா மாவட்டத்தின் தானியாகேதி கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துக்கு அடியில் வைத்து சிகிச்சையளிகப்படுகிறது. அவர்களுக்கான ட்ரிப்ஸ் மரக் கிளையில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: