1-10 வயது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் கொரோனா: நிபுணர்கள் எச்சரிக்கை

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் கொரோனா-நிபுணர்கள் எச்சரிக்கை

10 வயதுக்கும் குறைவான குழந்தைகளை கொரோனா பாதிப்பது அதிகரித்து வருவதாக தேசிய கோவிட் அவசர நிலை உத்தி வகுப்புப் பணிக்குழுவின் எம்பவர்டு குரூப் எச்சரித்துள்ளது.

 • Share this:
  தரவுகளின்படி, 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 7.04% ஆக அதிகரித்துள்ளது. மேலும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

  ஆனால் இந்த மாற்றம் கண்டு அஞ்சத்தேவையில்லை, சிறிய அளவில்தான் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று கூறும் நிபுணர்கள் குழு வயதானோர் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு கோவிட் பாதிப்பிலிருந்து மீள மீள அது குழந்தைகளைத் தொற்றுவது லேசாக அதிகரித்து வருகிறது என்று கூறுகின்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தரவுகள் விவாதிக்கப்பட்டன.

  மார்ச் 2021-க்கு முன்பாக ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 9 மாதங்களில் 1-10 வயதுடைய குழந்தைகளை கொரோனா தொற்றுவது என்பது மொத்த பாதிப்புகளில் 2.72% லிருந்து 3.59% ஆக மட்டுமே இருந்தது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குழந்தைகள் பாதிப்பு கோவிட் எண்ணிக்கைகளின் படி மிஜோரமில் மொத்த பாதிப்புகளில் 16.48% 10 வயதுக்கும் கீழான குழந்தைகளாவர். டெல்லியில் ஆகக்குறைவாக இது 2.25% ஆக உள்ளது.

  மேகாலயாவில் 9.35%, மணிப்பூரில் 8.74%, அந்தமான் நிகோபார் தீவுகளில் 8.2%, சிக்கிமில் 8.02%, கேரளாவில் 8.62%, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் 7.69%, அருணாச்சலப் பிரதேசத்தில் 7.38%, தேசிய சராசரி 7.04% என்று 1-10 வயதுடைய குழந்தைகளை கொரோனா பாதிக்கும் எண்ணிக்கைகள் உள்ளன.

  Also Read: 3வது அலை வாய்ப்பு குறைவே எனினும் பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்ட வேண்டாம்: விஞ்ஞானி டாக்டர் கங்காகேட்கர் எச்சரிக்கை

  தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக குழந்தைகளை பாதிக்கும் மாநிலங்களில் புதுச்சேரி (6.95%), கோவா (6.86%), நாகாலாந்து (5.48%) அசாம் (5.04%), கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகளை கொரோனா பாதிப்பதில் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாகவே பாதிக்கிறது.

  முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் முன்பை விட எச்சரிக்கை உணர்வு அதிகமாகவுள்ளது அதே போல் பாதிக்கக்கூடிய நிலையில் குழந்தைகள் இருப்பதும் அதிகரித்துள்ளது. செரோ சர்வேயின்படி குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 57-58% ஆக இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. பெரியோர்கள் கொரோனாவினால் பாதிப்படைவது குறைவதால் குழந்தைகளை பாதிக்கின்றது என்கிறது ஐசிஎம்ஆர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: