முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா?

ஆந்த்ராக்ஸ் நோய் மனிதர்களுக்கு பரவுமா?

Corona Cases in india - மும்பையில் மட்டும் 20,181 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 28% கூடுதலாகும்.

கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஓமைக்ரான் பரவியிருக்கிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 91,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,17,100 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,52,26,386 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 28% கூடுதலாகும்.

Also read:  தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,265 பேரும், மேற்குவங்கத்தில் 15,421 பேரும், டெல்லியில் 15,097 பேரும், தமிழகத்தில் 6,983 பேரும், கர்நாடகாவில் 5,031 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை மாறியிருக்கிறது. மும்பையில் மட்டும் 20,181 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. இதுவரை 2,630 ஆக இருந்த ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இன்று 3,007 ஆக அதிகரித்துள்ளது.  இதில் 1.199 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 377 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 302 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. 30,836 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர், இதன் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 ஆக அதிகரித்துள்ளது.

Also read:   இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

நாட்டில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,71,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,47,056 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 1,49,66,81,156 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19, Omicron