Home /News /national /

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு... தொற்று எண்ணிக்கை உயர்ந்தது

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு... தொற்று எண்ணிக்கை உயர்ந்தது

கடந்த 24 மணி நேரத்தில் 954 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,08,788 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பாதிப்பை விட 175 எண்ணிக்கை அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

iஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,65, 118 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 11, 558 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 954 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, 25,08,788 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க - பேட் டச்! சிறுமி மார்பகத்தை தொட்டாலும் குற்றமே... போக்சோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

கொரோனாவில் இருந்து மீள்வோரின் சதவீதம் 98.76 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 ,21,751 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க - அசாமில் கடும் மழை வெள்ளம் - 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 12, 56, 533 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 186 கோடியே 51 லட்சத்து 53 ஆயிரத்து 593 தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Corona Vaccine, CoronaVirus

அடுத்த செய்தி