Home /News /national /

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு...

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரத்து 454 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு நாட்டில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது.

233 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் தற்போது 11 ஆயிரத்து 132 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 0.03 சதவீதம் ஆகும்.

இதையும் படிங்க - பொது கழிப்பறையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

ஒட்டுமொத்தமாக பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.76 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரத்து 454 ஆக உள்ளது.

இதையும் படிங்க - பூஸ்டர் தடுப்பூசி சேவை கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

இந்தியாவில் 185.7 கோடி தடுப்பூசிகள் ஒட்டுமொத்தமாக போடப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதை தொடர்ந்து, பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Covid-19

அடுத்த செய்தி