Home /News /national /

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி!

வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா 3வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் தினசரி கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

    இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ஐதராபாத்தில் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர் வீட்டுத் தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது.

    இன்னும் சில தினங்களில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெங்கையா நாயுடுவிற்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருந்த நிலையில், தற்போது 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: கொரோனா பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? மத்திய அரசு அறிவுரை!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி