Home /News /national /

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த Cowin போர்ட்டலில் முன்பதிவு செய்வது எப்படி?

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த Cowin போர்ட்டலில் முன்பதிவு செய்வது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியை பொறுத்தவரை, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தான் பயன்படுத்தப்படும் என்று உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

ஜனவரி 3 முதல் 15-18 வயது உட்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசி மையத்தின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அல்லது, அரசின் Cowin போர்ட்டலில் பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. cowin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

பல்வேறு நிறுவனங்களும் நாட்டின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியை பொறுத்தவரை, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தான் பயன்படுத்தப்படும் என்று உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆன்லைனில் பதிவு செய்து உங்கள் பிள்ளைகளை தடுப்பூசி செலுத்தலாம் அல்லது தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நேரடியாக சென்று குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு முன்னர், பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது தடுப்பூசி என்னவெல்லாம் செய்ய வேண்டும் மற்றும் செய்யக் கூடாது என்ற விதிமுறைகள் கூறப்பட்டு இருந்ததோ, அதுவே குழந்தைகளுக்கும் பொருந்தும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, குழந்தைகள் தடுப்பூசி மையத்திலேயே அரை மணி நேரம் வரை இருக்க வேண்டும். தடுப்பூசி போடுவதால் உடனடியாக ஏதேனும் விளைவுகள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு அவர்கள் செல்லலாம். முதல் டோஸுக்குப் பிறகு, இரண்டாவது டோஸ் இருபத்தி எட்டு நாட்களுக்கு பிறகு வழங்கப்படும்.

ALSO READ |   இந்தியாவில் டெல்டா அலை போல் ஓமைக்ரான் ஜனவரியில் உச்சம் பெறும்; உலகம் முழுதும் 300 கோடி பேரை பாதிக்கும்- அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, நீங்கள் கோவின் போர்ட்டல் வழியாக பதிவு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

* gov.in இணையத்தளத்திற்கு செல்லவும்.

* “Vaccination for children” குழந்தைகளுக்கான தடுப்பூசி என்பதைக் கண்டறிந்து, ‘book your slot’ என்ற விருப்பத்தின் கீழே உங்கள் ஸ்லாட்டை முன்பதிவு செய்யவும்.
* உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
* OTP ஐ, போர்ட்டலில் உள்ளிட்ட பிறகு, ‘verify and proceed’ என்ற சரிபார்த்து முன்னேறிச் செல்லவும் என்ற என்பதைக் கிளிக் செய்யவும்.
* தடுப்பூசி பதிவு செய்யும் பக்கம் உங்கள் திரையில் தோன்றும். நீங்கள் ஏற்கனவே கோவின் போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், நீங்கள் சேர்த்திருந்த உறுப்பினர்களின் பட்டியலைப் பார்க்கலாம். ‘Add a * member’ என்ற ஒரு உறுப்பினரை சேர்க்கவும். அல்லது, புதிதாக உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்கலாம்.
* உங்கள் குழந்தையின் புகைப்படம் அடையாள அட்டை, பெயர், வயது மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டவும்.

* அனைத்து விவரங்களையும் உள்ளிட்டபின், ‘register’ என்பதைக் கிளிக் செய்து, பதிவு செய்யும் செயல்முறையை நிறைவேற்றுங்கள்.

நீங்கள் விரும்பும் இடத்தில் இருக்கும் தடுப்பூசி மையத்தில் உங்கள் ஸ்லாட்டை முன்பதிவு செய்ய, அந்த இடத்தின் அஞ்சல் குறியீடை உள்ளிடுங்கள். பின்னர், நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிட்டு, உறுதிபடுத்த ‘confirm’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Corona Vaccine, Covid-19, Vaccine

அடுத்த செய்தி