Home /News /national /

இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!

இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!

இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.  

இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.  

இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.  

    நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில், இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியது. நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வருகிறது.

    நாட்டில் இதுவரை 144.54 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் 84.51 கோடி பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 60.15 கோடி பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

    தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேபோல் முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கு வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ‘முன்னெச்சரிக்கை’ தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் (2007ம் ஆண்டிலோ அதற்கு முன்போ பிறந்தவர்கள்) இன்று முதல் ‘கோவின்’ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    சிறார்கள், தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாரை வைத்து கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona Vaccine, Omicron, Vaccine

    அடுத்த செய்தி