12 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் - யுனிசெஃப் அறிக்கை
12 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் - யுனிசெஃப் அறிக்கை
கோப்புப் படம்
கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த 6 மாதங்களில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டும் 12 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, தெற்காசிய நாடுகளில், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளில் சுமார் 60 கோடி குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆய்வு நடைபெற்றது. பள்ளி கல்வியை தொடர முடியாத சூழலில் வெளியேறும் போக்கும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில பள்ளி மாணவர்களுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைக்கும் சூழலும் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவது, போதிய ஊட்டச்சத்து இல்லாமல் போவதும் குழந்தைகளை அடுத்த 6 மாதங்களில் எதிர்கொள்ளும் பிரச்னைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.