கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்யும் நடவடிக்கையாக தெலங்கானாவில் முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பலரின் ஏப்ரல் மாத சம்பளத்தில் பெரும்பகுதி பிடித்தம் செய்யப்பட உள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் கொரோனா காரணமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரகதி பவனில் நடத்தப்பட்ட உயர்மட்டக்குழு கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உட்பட பலரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அளவு பிடித்தம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதலமைச்சர், அமைச்சர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில் 75 விழுக்காடும், அரசு ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்களிடம் 50 வி்ழுக்காடு அளவு தொகை பிடிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chandrasekar rao, CoronaVirus, Telangana