• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் - கருப்பு பூஞ்சை பயத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் - கருப்பு பூஞ்சை பயத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்

கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது.

  • Share this:
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் பால்டி பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று அந்த அடிக்குமாடி குடியிருப்பின் மாடியில் மயங்கிய நிலையில் அவரை மீட்டுள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பால்டி பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மீண்ட முதியவர் கருப்பு பூஞ்சை தாக்குதல் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    Also Read: கொரோனாவுக்கு எதிரான புதிய நம்பிக்கை: மீண்டவர்கள், தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

    இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “தற்கொலை செய்துக்கொண்ட முதியவர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பொருளாதார ரீதியிலும் இவரது குடும்பம் நல்ல நிலையில்தான் உள்ளது. இவருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

    அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் அதை குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் அதாவது கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என நினைத்துள்ளார். இதன் காரணமாக அவர் பயத்தில் இருந்துள்ளார்.

    கொரோனா நோய்த்தொற்று பிறகு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. அவருக்கு வாய்ப்புண் ஏற்பட்ட பிறகு பயம் மேலும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: