• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஐசியூ படுக்கைக்கு போராட்டம்.. பரிதாபமாக உயிரிழந்த கொரோனா நோயாளி - பெங்களூருவில் நடந்த சோகம்

ஐசியூ படுக்கைக்கு போராட்டம்.. பரிதாபமாக உயிரிழந்த கொரோனா நோயாளி - பெங்களூருவில் நடந்த சோகம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மருத்துவமனைக்கு அழைந்ததில் அவருக்கு அளித்து வந்த ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஒற்றை இலக்கு வந்துவிட்டது

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா நோய்த்தோற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பெங்களூருவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஐசியூ படுக்கை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த 31 வயதான நபர் மடிவாலா பகுதியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் ஏப்ரல் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஐசியூவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். தன்னார்வலர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர். கிரிநகரில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஐசியூவில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் மருத்துவமனைக்கு அழைந்ததில் அவருக்கு அளித்து வந்த ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஒற்றை இலக்கு வந்துவிட்டது. நோயாளியின் உடல் நலனும் பாதிக்கப்பட்டது . உடனடியாக அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரமங்கலா பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் இடம் இருப்பதை உறுதி செய்து அவரை அழைத்து சென்றனர்.

    மருத்துவமனையில் இரவு 12.40 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவிகித படுக்கையை ஏற்படுத்துமாறு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் படுக்கை வசதி இல்லை என நோயாளியை வெளியேற்றிய இரண்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: