இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா!

டெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2ம் அலை கடுமையாக பரவி வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

நாடிடில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக நொய்ட்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆறரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் 10 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் தற்போது நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,46,631 ஆக உள்ளது. மொத்தமாக பாதிப்புக்குள்ளானோரில் சிகிச்சை பெற்று வருவோரின் பங்கு 7.93% ஆக உள்ளது. பிப்ரவரி 12ம் தேதி நாட்டில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,35,926 ஆக மட்டுமே இருந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை லட்சங்களில் உள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 794 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி 20 லட்சத்தை கடந்தது. இதே போல 30 லட்சத்தை ஆகஸ்ட் 23 அன்றும், 40 லட்சத்தை செப்டம்பர் 5 அன்றும், 50 லட்சத்தை செப்டம்பர் 16 அன்றும், 60 லட்சத்தை செப்டம்பர் 28 அன்றும், 70 லட்சத்தை அக்டோபர் 11 அன்றும், 80 லட்சத்தை அக்டோபர் 29 அன்றும், 90 லட்சத்தை நவம்பர் 20 அன்றும், ஒரு கோடியை டிசம்பர் 19 அன்றும் கடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தரவுகளின்படி நாட்டில் இதுவரை 25,52,14,803 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 9) மட்டும் 11,73,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 534603 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 58084 பேரும், கேரளாவில் 36185 பேரும், தமிழகத்தில் 33659 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 48306 பேரும், சட்டீஸ்கரில் 76868 பேரும், மத்திய பிரதேசத்தில் 30486 பேரும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
Published by:Arun
First published: