Corona Lockdown : கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் முழு ஊரடங்கு அமலாகிறது!

நாக்பூரில் லாக்டவுன்

கேரள மாநிலத்தில் மே 8 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

  • Share this:
கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் அளவு 4 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 4,000ஐ நெருங்கிவிட்டது.

கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் கடுமையாக அதிகரித்துள்ளதையடுத்து பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 50,000ஐ நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,781 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல 592 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மே10ம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கி 2 வாரத்திற்கு மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்காலிக முடிவு எனவும் இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டாம் எனவும் முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காலை 10 மணிக்கு மேல் ஒரு நபர் கூட சாலையில் தேவையில்லாமல் நடமாடக்கூடாது எனவும் காவல்துறை கடுமையாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என தான் உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி இயங்கி வரும் விமானம் மற்றும் ரயில் சேவையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மேற்கண்ட விமானம்/ரயில்களில் பயணிப்போர் டிக்கெட்டை பயன்படுத்தி மாநிலத்தில் சொந்த/வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து பிற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறை கைதி!


மேலும் காய்கறி, மளிகை, மதுக்கடைகள் கறிக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரள மாநிலத்தில் நாளை (மே 8) முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: