Home /News /national /

டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

நேற்று ஒரே நாளில் 176 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,65,796ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட ஒமைக்ரான் பரவல் குறைந்து காணப்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குபின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

    அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்ரான் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    நேற்றைய தினம் 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் உயிரிழந்திருந்தார். எனினும், இன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    நேற்று ஒரே நாளில் 176 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,65,796ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 26,155 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்படைந்த 362 பேர் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 9,745 படுக்கைகள் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளதாகவும், அதில் 39 படுக்கைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லியில் இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜன.13ம் தேதி ஒரே நாளில் 28,867 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Delhi

    அடுத்த செய்தி