ம.பி. முதல்வர் ‘சிவன்’, கட்சித் தலைமை ‘விஷ்ணு’ இருக்கும் போது கொரோனா அண்டாது- பாஜக பெருமை

சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் என்ற சிவனும் பாஜக மாநிலத் தலைவர் விஷ்ணு தத் என்ற விஷ்ணுவும் இருக்கும்போது கொரோனா வைரஸ் மத்தியப் பிரதேசத்தை அண்டாது என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

 • Share this:
  மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் என்ற சிவனும் பாஜக மாநிலத் தலைவர் விஷ்ணு தத் என்ற விஷ்ணுவும் இருக்கும்போது கொரோனா வைரஸ் மத்தியப் பிரதேசத்தை அண்டாது என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

  சிவ்ராஜ் சிங் மற்றும் விஷ்ணு தத் போன்ற மானுட உருவங்களை கடவுளர்கள் சிவன், விஷ்ணுவாக உருவகித்து பேசலாமா என்று சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

  இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாடிய போது, வெறும் கட்சித் தொண்டர்களின் கைத்தட்டலை வாங்குவதற்காக இப்படியெல்லாமா பேசுவது என்று சாடியுள்ளது.

  மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவினால் 10,514 பேர் மரணமடைந்துள்ளனர்.

  ஆனால் காங்கிரஸ் தலைவர் புபேந்திர குப்தா கூறும்போது, “இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3.28 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது சாதாரண மரண விகிதத்தை விட 54% அதிகம்.

  பாஜக மாநில தலைவரே பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 3,500 பேர் கொரோனாவினால் மரணமடைந்ததாகக் கூறுகிறார். கொரோனா தலைவிரித்தாடியபோது சிவராஜும் விஷ்ணுவும் எங்கு இருந்தனர்? அவர்கள் என்ன தூங்கிக் கொண்டிருந்தனரா? எதிர்காலத்தில் இன்னொரு அலை வீசினால் என்ன செய்வார்கள்?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இப்படி சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்வது இவர்களை போன்ற எதேச்சதிகார, சர்வாதிகாரிகளுக்கு சகஜம்தானே. இவர்கள் தங்களையே கடவுளாகக் கருதுகின்றனர்” என்று சாடினார்.
  Published by:Muthukumar
  First published: