Home /News /national /

Covaxin பூஸ்டர் டோஸின் ஓமைக்ரானுக்கு எதிரான செயல்திறன் என்ன - பாரத் பயோடெக் பதில்

Covaxin பூஸ்டர் டோஸின் ஓமைக்ரானுக்கு எதிரான செயல்திறன் என்ன - பாரத் பயோடெக் பதில்

Covaxin

Covaxin

Covaxin பூஸ்டர் தடுப்பூசி, கோவிட் டெல்டா மற்றும் ஓமைக்ரான் வகைகளை எதிர்த்து நல்ல பலன் தருவதாக சோதனைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    கோவாக்ஸின் பூஸ்டர் தடுப்பூசி, கோவிட் டெல்டா மற்றும் ஓமைக்ரான் வகைகளை எதிர்த்து நல்ல பலன் தருவதாக சோதனைகள் சுட்டிக்காட்டியுள்ளன என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தற்போது தொடங்கியுள்ளது. முதல் இரண்டு அலைகள் போல பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் 3வது அலையில் தவிர்க்கப்பட்டிருப்பதற்கும் முழு முதல் காரணம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மட்டுமே. கொரோனாவுக்கு எதிரான போரில் எதிர்த்து போரிட நம்மிடையே இருக்கக்கூடிய பெரிய ஆயுதம் தடுப்பூசி தான். நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன.

    முதலில் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 18 - 45 வயதினருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. தற்போது 15 - 18 வயது தரப்பினருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.. ஆரம்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளும் பின்னர் ஸ்புட்னிக், ஜான்சன் & ஜான்சன், Moderna, Zydus Cadila's ZyCoV-D போன்ற வெளிநாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    Also read:  Omicron | பூஸ்டர் தடுப்பூசிகளால் பயனில்லை - உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவல்

    ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்டால் தூண்டப்பட்டுள்ள மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகளும் நம் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் ஓமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்ற கேள்விக்கு கோவேக்ஸின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் பதிலளித்துள்ளது.

    பாரத் பயோடெக் கூறியிருப்பதாவது, “கோவாக்ஸின் பூஸ்டர் தடுப்பூசி, கோவிட் டெல்டா மற்றும் ஓமைக்ரான் வகைகளை எதிர்த்து நல்ல பலன் தருவதாக சோதனைகள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவின் Emory பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கோவேக்ஸின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பாதுகாப்பானது மற்றும் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது.

    Also read:  மனைவியை மாற்றி உல்லாசம்: சிக்கும் தமிழக பிரபலங்கள்

    ஒரேவிதமான மற்றும் பலவகை கொரோனா வேரியண்ட்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை 19 முதல் 265 மடங்கு கோவேக்ஸின் பூஸ்டர் டோஸ் அதிகரித்துள்ளது.” இவ்வாறு பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covaxin, Covid-19 vaccine

    அடுத்த செய்தி