நாடு முழுவதும் உள்ள 6-12 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் (Covaxin) கோவிட் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை கோவாக்சின் நிறுவனம் தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பு குறித்து தகவலை டிசிஜிஐ இடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு மாதங்களுக்கு 15 நாளைக்கு ஒரு முறையும், பின்னர் மாதா மாதம் பாதுகாப்பு தொடர்பான தகவல் புள்ளி விவரத்தை சமர்பிக்க வேண்டும் என டிசிஜிஐ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு குறைந்து அனைத்து கல்வி நிறுவனமும் வழக்கம் போல் செயல்பட்டுவரும் நிலையில், சில வாரங்களாக பள்ளிக் குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு பதிவாகி வருகிறது. ஏற்கனவே 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 12 வயதுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இத்துடன், 5 முதல் 12 வயதினருக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தவும் டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சைடஸ் காடில்லா தடுப்பூசி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என கோவிட் தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
COWIN இணையதள புள்ளிவிவரப்படி இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் சுமார் 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 85.28 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.இரண்டரை கோடிக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை... வாட்டி வதைக்கும் வெப்பக்காற்றால் ஒடிசா அரசு அறிவிப்பு
இந்தியாவில் புதிதாக 2,483 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஒரு நாளில் 22 லட்சத்து 83 ஆயிரத்து 224 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் குறைவகாவே பதிவாகி வந்தது. ஆனால் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் பதிவாகி வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பொதுவெளியில் முகக்கவசம் செலுத்துவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. மீறினால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covaxin, Covid-19 vaccine, Vaccination