புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் வீரியமுடன் செயல்படுகிறது - பாரத் பயோடெக் பெருமிதம்!

கோவேக்சின்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் படுக்கையின்றி திணறி வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட்-19 வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கி ஏராளமான மக்கள் அதிவிரைவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் அலையில் இருந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை விட இரண்டாம் அலையில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் படுக்கையின்றி திணறி வருகின்றன.

இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க அதிக மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதை தவிர வேறு சிறந்த வழி இல்லை என்று சுகாதார துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக உலகம் முழுதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பரவலாக புழக்கத்தில் உள்ளன.

தடுப்பூசிகளுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியானாலும், பெரும்பாலான மக்கள் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை செலுத்தி கொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர். அதே சமயம் இரண்டாம் அலையில் பரவி வரும் குழந்தைகளுக்கு கூட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையுடைய கோவிட் வைரஸிற்கு எதிராக தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படும் என்பது பொதுவாக அனைவருக்கும் எழும் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் காணப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸிற்கு எதிராகவும் தங்களது கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மிகவும் வீரியமாகவும், பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Also read... ட்விட்டரில் புதிரான புகைப்படத்தை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!

இந்தியா மற்றும் இங்கிலாந்தில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் வகைகளான B.1.617 மற்றும் B.1.1.7 ஆகியவற்றிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியானது சிறப்பான முறையில் வீரியமாக செயல்படுவதாக, மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழான கிளினிக்கல் இன்பெக்ஷியஸ் டிஸீஸில் (Clinical Infectious Diseases)ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பாரத் பயோடெக் இணை நிறுவனரும் இணை நிர்வாக இயக்குநருமான சுசித்ரா எல்லா (Suchitra Ella) வெளியிட்டுள்ள ட்விட்டில், " தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸின் புதிய வகைகளுக்கு எதிரான பாதுகாப்பை நிரூபிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி தரவுகளால் கோவாக்சின் மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த ட்விட்டில் இந்திய பிரதமர் அலுவலகம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரையும் tag செய்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: