”நோ மீன்ஸ் நோ” பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாதமே இறுதி - உச்ச நீதிமன்றம்

”நோ மீன்ஸ் நோ” பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாதமே இறுதி - உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 31, 2019, 12:35 PM IST
  • Share this:
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு நடந்தது என பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தால் அந்த வாதத்தைத்தான் இறுதியானதாக கருத வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த திருமணமாகாத இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் உறவு கொண்டுள்ளார். அதை ரகசியமாக வீடியோ எடுத்து, பின்னர் அதைக்காட்டி மீண்டும், மீண்டும் அப்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.

தன்னுடைய தன்மானம் கருதி இந்த கொடுமையை அந்தப்பெண் வெளியே சொல்லவில்லை. ஆனால், தனது திருமண நிச்சயதார்த்தத்தின் போது கூட அந்த நபர், வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி தன்னை பாலியல் உறவுக்கு அழைக்கவே, போலீசுக்கு சென்று தொழிலதிபர் மீது புகார் அளித்தார்.


தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தொழிலதிபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த தொழிலதிபர் குறிப்பிட்ட தொகையை கொடுத்து இருவரும் சமரசமாகி விட்டனர்’’ என்று கூறி, தொழிலதிபர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு தக்கு அநீதி என்று கூறிய அந்தப்பெண், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை மிரட்டி அந்த தொழிலதிபர் பாலியல் உறவு கொண்டார். மேலும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி அவருடன் சமரசம் செய்து கொண்டதாக ஆவணங்களில் எழுதி வாங்கினர் எனவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்கோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன், இது தொடர்பான சட்டங்கள் குறித்து கீழமை நீதிமன்றங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.அதன்படி, ‘‘இந்திய சாட்சிய சட்டம் 1872-ம் ஆண்டு பிரிவு 114ஏ விருப்பத்துக்கு மாறான பாலியல் வன்கொடுமை சட்டத்தின்படி, ஒரு பெண் தனது விருப்பத்துக்கு மாறாக ஆண் ஒருவர் தன்னுடன் பாலியல் உறவு கொண்டார் என குற்றம் சாட்டினால் அந்த வாதத்தைத்தான் நீதிமன்றங்களும் இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பெண் திருமணமானவர் என்றாலும் சரி, திருமணமாகாதவர் என்றாலும் சரி பாலியல் உறவுக்கு சம்மதம் இல்லை என்றால் அதற்கு அர்த்தம் இல்லைதான்.

இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் தவறு செய்துள்ளது. இந்த வழக்கில் சமரசமானார்கள் என்று கூறப்படுவது பற்றியும், அப்பெண்ணின் தீவிரமான குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பாலியல் வல்லுறவு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Also See...

First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்