ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிறுமி பாலியல் வன்கொடுமை.. கோபத்தில் கொந்தளித்த நீதிபதி.. ஆசிரியருக்கு 20ஆண்டுகள் ஜெயில்!

சிறுமி பாலியல் வன்கொடுமை.. கோபத்தில் கொந்தளித்த நீதிபதி.. ஆசிரியருக்கு 20ஆண்டுகள் ஜெயில்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரபு மொழியில் குர்ஆனைப் படிப்பதற்காக தனது வீட்டிற்குச் சென்ற 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மௌலானாவை குற்றவாளி என தீர்ப்பளித்து 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது மும்பை நீதிமன்றம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி சீமா ஜாதவ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, ஒரு ஆசிரியர் பாதுகாவலராக செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மத விரோதம் காரணமாக இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 AB (12 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை) மற்றும் POCSO சட்டத்தின் பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பாலியல் வழக்குகளில் இனி இரு விரல் சோதனை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

‘பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமி. குற்றம் சாட்டப்பட்டவர் சாமானியர் அல்ல, ஒரு ஆசிரியர். மற்ற தொழில்களை உருவாக்கும் ஒரே பணி ஆசிரியர். வருங்கால சந்ததியினரின் நலனுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் வல்லமை கொண்டது இந்த பணி’ என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ‘ஆசிரியர் ஒரு பாதுகாவலராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் இத்தகைய கொடூரமான செயல்கள் பாதிக்கப்பட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் உளவியல் மற்றும் உணர்ச்சித் தாக்கத்தை ஏற்படுத்தும். 8 வயதுடைய ஒரு குழந்தையை இரையாக்கி, அவள் வாழ்வில் நிரந்தர வடுவை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்புக்கு தகுதியானவர் அல்ல’ என்று குறிப்பிட்டது.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற கோஃபி அன்னனின் மேற்கோளைப் பற்றி நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது, ‘பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மிகவும் வெட்கக்கேடான மனித உரிமை மீறலாக இருக்கும். அதற்கு புவியியல், கலாச்சாரம் என்று எதுவும் தெரியாது. இது தொடரும் வரை, சமத்துவம், மேம்பாடு மற்றும் அமைதியை நோக்கி நாம் உண்மையான முன்னேற்றம் அடைய முடியாது’.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது வகுப்புகளுக்குச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதைப் பற்றி யாரிடமாவது கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி, தன் மீதான வன்கொடுமை குறித்து தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர் தியோபந்தி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், மத விரோதம் காரணமாக இது பொய்யான வழக்கு என்று கூறியிருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பத்தினரும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் என்று குறிப்பிட்டது.

Published by:Archana R
First published:

Tags: Rape case