Home /News /national /

அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய ஸ்வீட் பாக்ஸை சீனாவுக்கு அனுப்பிய கூரியர் நிறுவனம்.. நீதிமன்ற தீர்ப்பால் கஸ்டம்ர் ஹேப்பி

அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய ஸ்வீட் பாக்ஸை சீனாவுக்கு அனுப்பிய கூரியர் நிறுவனம்.. நீதிமன்ற தீர்ப்பால் கஸ்டம்ர் ஹேப்பி

கூரியர் நிறுவனத்திற்கு ஐதராபாத் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

கூரியர் நிறுவனத்திற்கு ஐதராபாத் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளரின் பிரச்னையை சரி செய்வதற்கு முயற்சி செய்ததாகவும், ஆனால் சீனாவில் ஸ்வீட்டை பெற்றவர் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ப்ளூ டார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ஸ்வீட் பாக்ஸை சீனாவுக்கு கூரியர் நிறுவனம் அனுப்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் நடத்திய 4 ஆண்டுகள் சட்ட போராட்டத்தின் விளைவாக கூரியர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் டிஜிபி ஆர்.பி. தாகூர், ரக்ஷா பந்தனையொட்டி அமெரிக்காவில் உள்ள தனது உறவினருக்கு இனிப்புகளை பரிசளிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ராக்கி கயிறுகளுடன் இனிப்புகளையும் வாங்கிய தாகூர், அதனை ப்ளூ டார்ட் கூரியர் நிறுவனத்தின் வழியே அமெரிக்காவுக்கு அனுப்ப பார்சல் புக் செய்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய பார்சல், சீனாவில் உள்ள முகவரி ஒன்றுக்கு போய்ச் சேர்ந்துள்ளது. அங்கு இந்த பார்சலைப் பெற்றுக் கொண்ட நபர், அதிலிருந்த இனிப்புகளை ருசித்துள்ளார். பார்சலில் முன்னாள் டிஜிபி தாகூரின் மொபைல் போன் எண்கள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த சீனா நபர், தாகூருக்கு போன் செய்து இனிப்புகள் பிரமாதமாக இருந்தன. அனுப்பி வைத்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். பார்சல் சீனாவுக்கு சென்று விட்டது என்பதை உறுதிப் படுத்தும்  ரசீது மட்டும் தாகூருக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க - திருமணமான ஆணுடன் இளம்பெண் ஓட்டம்... மீட்பு செலவில் பாதியை காவல்துறைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனால் எரிச்சல் அடைந்த அவர், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வழக்கு ஐதராபாத் நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனில் நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக பார்சலை தவறான முகவரிக்கு அனுப்பிய ப்ளு டார்ட் நிறுவனத்திற்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு செலவுக்காக கூடுதலாக ரூ. 10 ஆயிரத்தை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாகூர் அளித்துள்ள பேட்டியில், ‘நுகர்வோர் என்றைக்கும் தங்களது உரிமையை விட்டுத் தரக்கூடாது. அபராத தொகையை திருப்பதி உண்டியலில் செலுத்த உள்ளேன். அஜாக்கிரதை காரணமாக எனது உணர்வுகள் பாதிப்படைந்தன’ என்று தெரிவித்தார். வாடிக்கையாளரின் பிரச்னையை சரி செய்வதற்கு முயற்சி செய்ததாகவும், ஆனால் சீனாவில் ஸ்வீட்டை பெற்றவர் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ப்ளூ டார்ட் நிறுவனம் கூறியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Consumer

அடுத்த செய்தி