காதலர் தினத்தில் வெளியிடங்களுக்கு வந்தால் தேசபக்திப் பாடம் - பஜ்ரங் தள் அறிவிப்பு

காதலர் தினத்தில் வெளியிடங்களுக்கு வந்தால் தேசபக்திப் பாடம் - பஜ்ரங் தள் அறிவிப்பு
பஜ்ரங் தள் அறிவிப்பு
  • News18 Tamil
  • Last Updated: February 14, 2020, 10:01 AM IST
  • Share this:
காதலர் தினத்தில் வெளியிடங்களில் நேரம் செலவழிக்கும் காதலர்களை எங்காவது பார்த்தால், நாட்டிற்கான தியாகத்தையும், தேசபக்தியின் முக்கியத்தையும் குறித்து சொல்லித்தருவோம் என அறிவித்துள்ளது இந்து அமைப்பான பஜ்ரங் தள்.

”கடந்த வருடம் இதே நாளில், புல்வாமா தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் நாட்டுக்காக உயிரிழந்தனர். எதிரிகளின் அந்த கோழைத்தனமான செயலை மறந்துவிட்டு நாம் காதலைக் கொண்டாட வேண்டுமா?. வெளியிடங்களிலோ, உணவகங்களிலோ, பூங்காக்களிலோ நேரம் செலவிடும் காதலர்களைப் பார்த்தால், திருமணம் செய்துவைக்கமாட்டோம். தேசபக்தியைக் கற்றுக் கொடுப்போம்” என்று டெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொள்கைப் பரப்பு செயலாளர் பாலஸ்வாமி தெரிவித்திருக்கிறார்.

Also See...


First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்