முகப்பு /செய்தி /இந்தியா / பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் 120 கிமீ ஸ்கூட்டரில் பயணம் - ஆந்திராவில் அவலம்

பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் 120 கிமீ ஸ்கூட்டரில் பயணம் - ஆந்திராவில் அவலம்

குழந்தையின் சடலத்தை எடுத்து சென்ற பெற்றோர்

குழந்தையின் சடலத்தை எடுத்து சென்ற பெற்றோர்

இந்த செய்தி பரவியதையடுத்து இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் படி முதலமைச்சர் சடலமாக மீட்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு பிப்ரவரி 2-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட குழந்தையை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 7.50 மணிக்கு அந்தகுழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது.

இதனை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தங்களுடைய சொந்த ஊரான பாடேரு அருகில் இருக்கும் குமுடு கிராமத்திற்கு குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல முடிவெடித்து ஸ்கூட்டரில் எடுத்து சென்றனர். பாடேரு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்து சேர்ந்த ஆம்புலன்ஸ் குழந்தையின் உடலை ஏற்றி கொண்டு குமுடு கிராமம் சென்று அடைந்தது.

இது குறித்து செய்தி வெளியான பிறகு, பெற்றோரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, ‘குழந்தையின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை’ என்று இறந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உடலுடன் பெற்றோர் 120 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு மாநில அரசின் செயல்படாத தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி குழந்தை உடலுடன் பெற்றோர் 120 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டரில் பயணித்தது பற்றி விசாரித்து அறிக்கையை அளிக்க விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் ‘குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். ஆனால் அதற்குள் யாரிடமும் சொல்லாமல் குழந்தை உடலுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பெற்றோர் தங்கள் குழந்தை உடலுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறாமல் சென்று விட்டது பற்றி பாடேரு பகுதி மலைவாழ் மக்கள் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் அளித்தோம். அவர்கள் பாடேரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து குழந்தை உடலை குமுடு கிராமத்திற்கு கொண்டு சேர்த்தனர்’ என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த குழந்தை உடலை அங்கிருந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் கொண்டு செல்வது சாத்தியமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் : புஷ்பராஜ் (திருப்பதி)

First published:

Tags: Ambulance, Andhra Pradesh, Jagan mohan reddy