மோடிக்கு ஓட்டு, ரஃபேல் விளக்கம்- வைரல் ஆகும் பா.ஜ.க மணமக்களின் திருமணப் பத்திரிகை

பத்திரிகையில் ‘நரேந்திர மோடியை நம்புங்கள்’ என்ற தலைப்பில் ரஃபேல் ஒப்பந்தம் மிகவும் நேர்மையாகவே நடந்ததாக பெரிய விளக்க உரையே அச்சடித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: January 14, 2019, 10:44 PM IST
மோடிக்கு ஓட்டு, ரஃபேல் விளக்கம்- வைரல் ஆகும் பா.ஜ.க மணமக்களின் திருமணப் பத்திரிகை
திருமண அழைப்பிதழ்
Web Desk | news18
Updated: January 14, 2019, 10:44 PM IST
திருமண பத்திரிகையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டும் ரஃபேல் ஊழலுக்கு விளக்கம் அளித்தும் ‘நமோ’ ஆப்-க்கு ஆதரவு கோரியும் பா.ஜ.க விசுவாச மணமக்கள் வைரலாகி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யுவராஜ்- ஷாக்‌ஷி என்ற மணமக்கள் தங்கள் திருமணத்துக்கான அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து தற்போது வைரலாகி உள்ளனர். வழக்கமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போல் திருமணம் பத்திரிகை அடிப்பது ட்ரெண்டிங் ஆக இருந்தது.

ரஃபேல் ஒப்பந்தத்தை விளக்கும் திருமண பத்திரிகை.ஆனால், இந்த குஜராத் மணமக்கள் முற்றிலுமாக பாஜக-வுக்கான பிரச்சார விளக்கமாகவே தங்களது பத்திரிகையை அச்சடித்துள்ளனர். பத்திரிகையில் ‘நரேந்திர மோடியை நம்புங்கள்’ என்ற தலைப்பில் ரஃபேல் ஒப்பந்தம் மிகவும் நேர்மையாகவே நடந்ததாக பெரிய விளக்க உரையே அச்சடித்துள்ளனர்.

மேலும், ‘நமோ செயலி மூலம் பா.ஜ.க-வுக்கான ஆதரவை அளிப்பதும் வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பதுமே நீங்கள் எங்களுக்கு அளிக்கும் திருமணப் பரிசு’ எனக் குறிப்பிட்டுள்ளனர். பாஜக விசுவாசிகளான மணமக்கள் வழங்கிய இந்தத் திருமண பத்திரிகை தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் பார்க்க: வடசென்னையைக் கொன்றுவிட்டதா தமிழ் சினிமா?

Loading...

First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...