நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொடர்ந்து வீட்டுக் கண்காணிப்பில் இருக்கவேண்டும். வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களை தினந்தோறும் 5 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?
கோப்புப் படம்
  • Share this:
144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அரசு துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படும். நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் இயங்கும்

ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் செயல்படும்.ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் இயங்கும். போதிய இடைவெளியுடன் மக்கள் வாங்கி உண்ணும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படும்.


மருத்துவமனைகள், மருந்தகங்கள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் செயல்படும். மருத்துவம் சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கும்.

அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனைகளுக்கு அனுமதி உண்டு. ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும்

உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும். தேநீர் கடைகள் செயல்படலாம். ஆனால், மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும். லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கும்..மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்கள் இயங்கும். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படும்.

அரசு, தனியார் பேருந்துகள், மெட்ரோ சேவை, டாக்ஸி, ஷேர் ஆட்டோ, ஆட்டோ என மக்களுடன் தொடர்புடைய அனைத்து பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி, ஷொமாட்டோ ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது.

ரயில், விமான நிலையங்கள் திறந்திருந்தாலும் சேவைகள் இருக்காது.

மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொடர்ந்து வீட்டுக் கண்காணிப்பில் இருக்கவேண்டும். வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களை தினந்தோறும் 5 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும், அவ்வாறு வரும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து 3 அடி விலகியே இருக்க வேண்டும்.

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுவதுமாக மூடப்படும். மார்ச் 16 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்த திருமணங்களை மட்டுமே மண்டபங்களில் நடத்தலால், அதிலும் 30 பேருக்கு மேல் கூடக் கூடாது.

கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Also see... சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்