PM Modi | நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை - பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி

நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை என்றும் அ்த்தியாவாசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.45 மணிக்கு உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகரிகளிடம் ஆலோசனை நடத்திய பின் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது, இந்தியா மீண்டும் கொரேனாவிற்கு எதிராக போராடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பிலிருந்தும் நாம் மீண்டு வருவோம். எந்த நேரத்தில் நாம் பொறுமை மற்றும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

    கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசியை உற்பத்தியை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்தேன். மருத்துவ நிபுணர்களின் தொடர் உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைத்தது. இவர்களின் அசாதரண உழைப்பால் 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்தது. கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ஆக்ஜிசன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் குறைந்த காலத்தில் விலை குறைந்த தடுப்பூசியை தயாரித்துள்ளோம். ஏழை மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கொரோனா முதல் அலையை விட 2-வது அலை அதிக சீற்றத்துடன் உள்ளது. புலம்பெயர் தொழிலார்களின் வாழ்வாதாரத்திற்கு மாநில அரசு உறுதியளிக்க வேண்டும் என்றார்.
    Published by:Vijay R
    First published: