அமேதியில் சர்வர் பாதிப்பு... வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்... ராகுல் பின்னடைவு!

தபால் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Web Desk | news18
Updated: May 23, 2019, 1:09 PM IST
அமேதியில் சர்வர் பாதிப்பு... வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்... ராகுல் பின்னடைவு!
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: May 23, 2019, 1:09 PM IST
அமேதி தொகுதியில் சர்வர் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. வரலாற்றில் இல்லாத நிகழ்வாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தார் முதன்முறையாக ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

அமேதி தொகுதியில் பாஜக-வின் ஸ்மிதி இராணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது. முதன்முறையாக இத்தொகுதியில் காங்கிரஸ் தற்போதைய சூழலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தபால் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இராணியைவிட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுல் தற்போது அமேதியில் மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் பார்க்க: தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...