Home /News /national /

விசில் அடித்ததும் இழுங்க.. பெண்கள் கயிறு இழுக்கும் போட்டியில் விழுந்து வாரிய கவுன்சிலர் - வைரல் வீடியோ

விசில் அடித்ததும் இழுங்க.. பெண்கள் கயிறு இழுக்கும் போட்டியில் விழுந்து வாரிய கவுன்சிலர் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

கேரளாவில் பெண்கள் கயிறு இழுக்கும் போட்டியின் போது கயிற்றின் மீது நின்று கொண்டிருந்த கவுன்சிலர் தவறி விழும் வீடியோ வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளா மாநிலத்தின்  முக்கிய  பண்டிகையான திருவோண பண்டிகை தற்போது கேரளாவில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த  ஓணப்பண்டிகையின் போது பூக்களால் கோலமிடுவது , திருவாதிரை நாட்டியம் உட்பட கயிறுஇழுக்கும் (வடம்வலி)  போட்டிகளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கொல்லத்தில் வெட்டுக்கலா என்னும் பகுதியில் பெண் பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றுள்ளது.கயிறு மீது நின்ற கவுன்சிலர் ஒருவர் 'நான் விசில் அடித்ததும் கயிறை இழுங்க 'என சொல்லிக்கொண்டு தான் கயற்றின் மீது நிற்பதை மறந்து விசில் அடித்துள்ளார்.



கவுன்சிலர் விசில் அடித்ததும் போட்டி போட்டுக் கொண்டு பெண் போட்டியாளர்கள் கயிறை இழுத்துள்ளனர்.இதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த செல்போன் காட்சிகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி