ஹோம் /நியூஸ் /இந்தியா /

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், வைரம் பதித்த ரூ.27 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், வைரம் பதித்த ரூ.27 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!

பிடிப்பட்ட கைக்கடிகாரங்கள்

பிடிப்பட்ட கைக்கடிகாரங்கள்

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச் கடை நடத்தி வருவது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 கோடி மதிப்பிலான தங்கம், வைரங்களை டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த  ஒரு பயணியை பிடித்து விசாரித்தனர். அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில், ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் உள்ளிட்ட விலை உயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டன.

  அதில், ஜேக்கப் அண்ட் கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த ஒற்றை வாட்சின் மதிப்பு 27 கோடியே 9 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின் மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  Also Read:4 நுழைவுவாயில்கள், 25 கண்காணிப்பு கோபுரங்கள்... ரூ.360 கோடியில் பிரதமருக்கு பிரமாண்ட வீடு கட்டும் மத்திய அரசு..!

  இதனை தொடர்ந்து துபாயில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Delhi Airport